கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
x
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பதவி வகித்து வரும் இளங்கோவன், 

அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகிப்பதோடு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என அறியப்படுகிறார்

இவர் வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவருக்கு சொந்தமாக சென்னை, சேலம், திருச்சியில் உள்ள 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

இதுதொடர்பாக இளங்கோவன் மீதும், மகன் பிரவீன் குமார் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்