மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி
x
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவியை, பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கி, கடந்த செப்டம்பர் 3- ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் முடிவு வெளியான பின், தலைவர் பதவியை பட்டியலின, பழங்குடியினருக்கும், பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கும், பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கி, அக்டோபர் 12ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, நெமிலி பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற மனோகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெமிலி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கியுள்ளதாகவும், இதுசம்பந்தமான புதிய அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், ஏழு நாட்கள் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து புதிய அறிவிப்பை வெளியிட அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்