"நேரடியாகவும், ஆன்-லைன் வழியாகவும் வகுப்புகள் நடத்தலாம்" - சென்னை உயர்நீதிமன்றம் யோசனை
பதிவு : அக்டோபர் 21, 2021, 06:47 PM
கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கை வெளியாவதால், ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கை வெளியாவதால், ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் மாணவர்களுக்கு  வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஆன்-லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால் வகுப்புகளை மீண்டும் துவங்க உத்தரவிடக் கோரி, நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டில், 23.8 சதவீத வீடுகளில் மட்டுமே இணைய தள இணைப்புகள் உள்ளதால் எல்லா மாணவர்களும் ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பள்ளி, கல்லூரிகளும், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன என தெரிவித்தனர்.

உடல் நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஆன் லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்பு வழங்க வேண்டும் எனவும், எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன் லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும்  நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் நேரடி வகுப்புக்கு மாற்றாக கூடுதலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும், கலப்பு முறையில் நேரடி மற்றும் ஆன் லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள்,  கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

526 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

99 views

பிற செய்திகள்

பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

10 views

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

50 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

15 views

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

43 views

"6- 7 முறை நில அதிர்வை உணர்ந்தோம்" - நில அதிர்வு... மக்கள் பீதி...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

23 views

"திமுகவைவிட அதிகம் கஷ்டப்பட்டது யாரும் இல்லை"

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.