பூ வியாபாரி தற்கொலை சம்பவம் எதிரொலி- வி.ஏ.ஓ. சீனிவாசன் தற்காலிக பணியிடை நீக்கம்
பதிவு : அக்டோபர் 21, 2021, 08:32 AM
மாற்றம் : அக்டோபர் 21, 2021, 09:32 AM
பேஸ்புக்கில் லைவ் செய்து விட்டு பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக வி.ஏ.ஓ தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வி.ஏ.ஓ நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி பிரபுவுக்கு சரண்யா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.  இவர் தன் பூர்வீக சொத்தை சகோதர‌ர்களுடன் பிரித்து வாங்குவதற்காக நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை நாடியுள்ளார். இதற்காக ஒருமாதகாலமாக வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு பிரபு அலைந்து வந்த நிலையில், சீனிவாசன்  10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பூ வியாபாரி நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலயம் அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் பேஸ்புக் லைவில் வி.ஏ.ஓ சீனிவாசன் லஞ்சம் கேட்டது, அலைக்கழித்த‌து என அனைத்தையும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆரணி வருவாய் துறையினர் வி.ஏ.ஓ சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சீனிவாசனை ஆரணி கோட்டாட்சியர் கவிதா தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

129 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

71 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

36 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

30 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

20 views

பிற செய்திகள்

"வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி"- கடிதம் மூலம் நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு

மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

8 views

பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

10 views

சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது

8 views

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்த‌து.

9 views

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

50 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.