கடலில் மூழ்குபவர்களை காக்க நடவடிக்கை - 100 பேர் அடங்கிய மீட்புக்குழு துவக்கம்

சென்னை மெரினாவில் நீரோட்டம் அதிகம் உள்ள நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடலுக்குள் இறங்கக்கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
x
சென்னை மெரினாவில் நீரோட்டம் அதிகம் உள்ள நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடலுக்குள் இறங்கக்கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 

மெரினா கடற்கரையில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு தொடர்கதையாகி வருகின்றன. 
உயிரிழப்புகளை தடுக்க மூழ்குதல் தடுப்பு பிரிவு குழு ஒன்று மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் காவல்துறை, கடலோர காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை, கடலோர காவல் குழுமம், சென்னை மாநகராட்சி, நீச்சல் வீரர்கள், முதலுதவி குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.  இந்த பிரிவை துவக்கி வைப்பதற்காக டிஜிபி சைலேந்திரபாபு, கடலோர பாதுகாப்பு குழும டிஜிபி சந்தீப் மிட்டல், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று நேரில் வந்து பார்வையிட்டு துவக்கி வைத்தனர். பின்னர் அலையில் சிக்குபவர்களை மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்த செய்முறை விளக்கத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடலுக்குள் இறங்கக்கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்