பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் , நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்டங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
x
அமைச்சர்கள் சிலரை,  மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர்  கே.என்.நேருவும்,  
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் பெரியசாமியும், 
திருப்பத்தூர் மற்றும்  கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு  அமைச்சர்  எ.வ. வேலுவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அமைச்சர்  தங்கம் தென்னரசுவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமைச்சர்  தா.மோ. அன்பரசனும்,  திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர்  ராஜ கண்ணப்பனும் திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் காந்தியும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்  சிவசங்கரும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு அமைச்சர் மெய்யநாதனையும் பொறுப்பாளர்களாக நியமித்து முதலமைச்சர்  ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்