சி.விஜயபாஸ்கர் உதவியாளரின் நண்பர் அலுவலகத்திற்கு சீல் வைப்பு

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உதவியாளரின் நண்பர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் வைத்தனர்.
x
முன்னாள் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னையில் உள்ள எட்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு சென்றனர். ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கர் உதவியாளரின் நண்பர் சந்திரசேகர் அலுவலகத்திற்கு சென்ற போது, அந்த அலுவலகம் பூட்டிப்பட்டிருந்தது. இதையடுத்து வருவாய்த்துறை உதவியுடன் அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல்,  நந்தனத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கும் ஆட்கள் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில், 
இருபத்தி மூன்று லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம்,19 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த சோதனையின் போது 4 கிலோ 280 கிராம் தங்கம் 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் சொத்து தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்