"6 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்"- உள்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடியில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
6 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்- உள்துறை செயலாளருக்கு  மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
கடந்த 15ம் தேதி முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில்  பதுங்கியிருந்த துரைமுருகனை போலீசார் வளைத்துள்ளனர். அப்போது துரைமுருகன் போலீசாரை அரிவாளாால் தாக்கிவிட்டு தப்பமுயன்றதால் சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.  இதில் கழுத்து, தலை உட்பட 3 இடங்களில் குண்டு பாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு மனித உரிமை அமைப்புகள், கண்டனம் தெரிவித்தன. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இது சம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்