முறையற்ற உறவுக்காக கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி
பதிவு : அக்டோபர் 18, 2021, 03:58 PM
கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் முன்னாள் அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளராக இருந்தவர். 

இவரின் மகன் இளங்கோ, சென்னையில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதிமுகவில் இருந்து வந்த நிலையில், தன் மாமன் மகளான உமா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. 

இதனிடையே தன் மனைவி உமாவுக்கு சங்கரன்கோவில் அரசு மாணவியர் விடுதியில் சமையல் பணி  செய்யும் வேலையை வாங்கித் தந்துள்ளார். இதற்காக இவர்கள், விடுதியின் அருகேயே வாடகை வீடு பார்த்து தங்கி உள்ளனர். வேலை விஷயமாக இளங்கோ சென்னைக்கு சென்று விடுவதால், உமா தன் குழந்தையுடன் தனியே இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த முத்துக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது முறையற்ற உறவாக தொடர்ந்திருக்கிறது...

இந்த விவகாரம் இளங்கோவிற்கு தெரியவரவே, அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. 

இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளார் இளங்கோ. அப்போது அவரை தீர்த்து கட்ட தன் காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார் உமா. இளங்கோவை தனியே அழைத்துச் சென்ற முத்துக்குமார், அவருக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்து தான் வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளார். 

சடலத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரித்த போது தான் நடந்த அத்தனையும் தெரியவந்தது. மனைவி உமா போட்டுக் கொடுத்த திட்டத்தின் படியே இந்த கொடூர கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது. இதன்பேரில் கொலை செய்த முத்துக்குமார், உமா, கொலைக்கு உதவிய சீனிவாசன் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

211 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

120 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

27 views

பிற செய்திகள்

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

41 views

கணவனை பிரிந்து வாழ்ந்த பள்ளி முதல்வர் சந்தேக மரணம்?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 35 வயது பெண், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

35 views

மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதல் கணவன்

ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

ஜெ.வின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் - போயஸ் இல்ல வழக்கின் ஆவணங்களை வைத்து தீபக் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

10 views

ஜெயலலிதா போல் உடையணிந்து பெண் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல உடையணிந்து, அவரது நினைவிடத்தில் பெண் ஒருவர் மரியாதை செலுத்தினார்.

15 views

ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.