விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x
நடப்பு நிதி ஆண்டில் பயிர்காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவம் விதமாக, தமிழக அரசு 2 ஆயிரத்து 327 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில், தமிழக அரசின் பயிர் காப்பீட்டுக் கட்டண மானியமாக  ஆயிரத்து 553 புள்ளி 15 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதன்படி இப்கோ-டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ஆயிரத்து 89 கோடி ரூபாயும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 507 கோடி ருபாயும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க ஒப்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், பணியை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  10 விவசாயிகளுக்கு சம்பா பருவ, பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கினார். சுமார் 1597 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட உள்ள நிலையில், 6 லட்சம் விவசாயிகள் பயன்பெற உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்