விஜயபாஸ்கர் சொத்து விவரங்கள் - முதல் தகவல் அறிக்கை வெளியீடு

முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து விவரங்கள் குறித்து முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை பார்ப்போம்.....
விஜயபாஸ்கர் சொத்து விவரங்கள் - முதல் தகவல் அறிக்கை வெளியீடு
x
01.04.2016 முதல் 31.03.2021 வரை விஜயபாஸ்கர் பல்வேறு அசையும் சொத்துகளை வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

7 டிப்பர் லாரிகள், 10 கலவை இயந்திரங்கள், ஒரு ஜேசிபி என 6 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 466 ரூபாய் மதிப்பில் அவர் வாகனங்களை வாங்கி உள்ளதாகவும்,

53 லட்சத்து 33 ஆயிரத்து 156 ரூபாய் மதிப்பில் B.M.W காரை அவர் வாங்கி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

40 லட்சத்து 58 ஆயிரத்து 975 ரூபாய் மதிப்பில் 85 புள்ளி 12 சவரன் நகைகளை விஜயபாஸ்கர் வாங்கியதாகவும், 

காஞ்சிபுரம் அருகே சிலவாட்டம், மொரப்பாக்கம் ஆகிய ஊர்களில் 3 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் விவசாய நிலங்களை வாங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், சென்னை பஹிரதி அம்மாள் சாலையில் 14 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு வாங்கி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில், 28 கோடியே 69 லட்சத்து 73 ஆயிரத்து 136 ரூபாய் மதிப்பில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, ராசி புளு மெட்டல்ஸ், கிரீன் லேண்ட் ஹை டெக் புரோமோட்டர்ஸ், ஓம் ஸ்ரீ வாரி ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடட், ராசி என்டர்பிரைசஸ், ஆன்யா என்டர்பிரைசஸ், சாய் ஹ்ரிதம்(Hridham) ஆகிய நிறுவனங்களில்,...

விஜயபாஸ்கரும், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நண்பர்களும் உரிமையாளராகவோ, பங்குதாரராகவோ இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. 

இதேபோல், விஜயபாஸ்கர் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் கல்வி அறக்கட்டளையை சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூரில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி, உடற்கல்வியியல் கல்லூரி,....

கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணம் மூலம் கட்டமைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்