விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
பதிவு : அக்டோபர் 18, 2021, 01:31 PM
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில், விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில், லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான கீழ்பாக்கம் விஜய்சாந்தி அப்பார்ட்மெண்ட்ஸில் உள்ள வீடு மற்றும் தியாகராய நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இதேபோல், நுங்கம்பாக்கம் எலைட் எம்பயரில் சின்னத்தம்பி பெயரில் உள்ள வீடு, நந்தனம் சேமியர்ஸ் சாலை ராகா குடியிருப்பில் உள்ள சரவணனின் வீட்டிலும் விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனிவாசனின் வளசரவாக்கம் பெத்தானிய நகர் வீட்டில் சோதனை நடக்கிறது. மந்தைவெளி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம், பெசன்ட் நகரில் உள்ள அன்யா என்டெர்பிரைசஸ் ஆகிய 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையிட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம்- 23 இடங்களில் சோதனை: இலுப்பூர் குவாரி உள்ளிட்ட இடங்களில் சோதனை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை வீடு,  இலுப்பூரில் உள்ள குவாரி, அவர் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திவருகிறது. விஜயபாஸ்கரின் பினாமி எனக்கூறப்படும் காண்ட்ராக்டர் சோத்துப்பாறை முருகேசன், அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் பாபு, நகர்மன்ற துணைத் தலைவர் சேட், கல்வி நிலையம் நடத்தி வரும் தனசேகரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 23 இடங்களில் லஞ்ச சோதனை நடக்கிறது. காலை முதலே, நூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

விஜயபாஸ்கர் மாமனாரின் கோவை வீட்டில் ரெய்டு  - 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை

கோவையில் உள்ள விஜயபாஸ்கர் மாமனார் வீட்டில், காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. கோவை நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் தந்தை வீடு உள்ளது. போலீஸ் பாதுகாப்புடன், காலை 6 மணிக்கு அங்கு சென்ற பெண் அதிகாரி உள்பட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கர் கோவை செல்லும் போது, அந்த வீட்டில் தங்குவது வழக்கம் என கூறப்படும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

விஜயபாஸ்கர் சகோதரி தனலட்சுமி வீட்டில் ரெய்டு - தமிழக அரசுக்கு அதிமுகவினர் கண்டனம்

விஜயபாஸ்கரின் சகோதரியான பல் மருத்துவர் தனலட்சுமியின் வீடு மற்றும் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் அரேபியன் கார்டனில் மருத்துவர் தனலட்சுமியின் வீடு உள்ளது. சோதனை நடைபெறும் அங்கு வந்த அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர், தமிழக அரசையும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரையும் கண்டித்து முழக்கம் எழுப்பினர். 

விஜயபாஸ்கர் அண்ணன் உதயகுமார் வீட்டில் ரெய்டு - நேர்முக உதவியாளர் குருபாபு வீட்டிலும் சோதனை

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. தலைநகர் சென்னை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத் துறை, திருச்சியிலும் களமிறங்கியுள்ளது. திருச்சி அன்பு நகரில் உள்ள விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளரான குருபாபுவின் வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், சோதனை நடந்து வருகிறது. 

கல்விக் குழும உரிமையாளர் வீட்டில் ரெய்டு - தனசேகரன் வீட்டில் சோதனையால், பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுபபாரதி கல்விக் குழும உரிமையாளர் தனசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான தனசேகரனுக்கு, ஆலங்குடி அடுத்துள்ள கைக்குறிச்சியில், பி.எட். கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி நடத்தி வருகிறார். கல்வி நிறுவனங்கள் மற்றும் தனசேகரனுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை பரிசோதித்து வருவதால் மேலும் சில இடங்களில் சோதனை நடைபெறக்கூடும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

160 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

95 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

61 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

21 views

பிற செய்திகள்

"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்"

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

5 views

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

6 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

8 views

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

12 views

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

15 views

பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.