பணத்தை திருப்பி கேட்டதால் பயங்கரம் - கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டி எடுப்பு
பதிவு : அக்டோபர் 18, 2021, 10:03 AM
திருவிடைமருதூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
போலீஸ் வந்திருக்கிறார்கள்... ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோண்டி கொண்டிருக்கிறார்கள்... தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் அருகே உள்ள குமரன் குடி கிராம‌ம் முழுக்க இதே பேச்சுதான்... 

சிறிது நேரத்தில் ஊரே பரபரப்பாக, மொத்த ஊரும் காட்டுப்பகுதியில் திரண்டது... 2 அடி தோண்டியிருந்த நிலையிலே தென்பட்டது ஒரு சாக்குப்பை... சுற்றியிருந்த அனைவரும் திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்க, அந்த சாக்குப்பையில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை வெளியே எடுத்தனர், போலீசார்....


யார் இந்த பெண்...? ஏன் கொல்லப்பட்டார்...? என்ற கேள்விகளுடன் போலீசாரையே பார்த்தபடி நின்றது கூட்டம்...

இது குறித்து போலீசார் கூறியபடி, சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் பெயர் அனிதா...தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தை சேர்ந்த  32 வயதான அனிதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 

அனிதாவின் கணவர் டேவிட் ஆரோக்யசாமி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 

பிள்ளைகளுக்கு பிரவுசிங் கற்று கொடுப்பதற்காக திருப்பனந்தாள் சென்றுவந்த போது அனிதாவிற்கு கார்த்திக் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 

அப்படித்தான் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியும் பிள்ளைகளை கம்யூட்டர் சென்டரில் விட்டுவிட்டு சென்ற அனிதா, அதன் பின் திரும்பவில்லை... 

பல மணி நேரமாகியும் அனிதா வராத‌தால், கம்யூட்டர் சென்டரில் இருந்த பிள்ளைகளை அனிதாவின் தந்தை சேவியர் அழைத்து சென்றுள்ளார். மேலும் மகளை காணவில்லை என காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். 

இதன் அடிப்படையில் அனிதாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், கார்த்திக்கை பிடித்து விசாரித்துள்ளனர். 

கம்யூட்டர் சென்டருக்கு வந்து போகும் போது, அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து அனிதாவின் கணவர் அனுப்பும் பணத்தை பெற்று வந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்,  கார்த்திக். இப்படியே 3 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருந்த நிலையில், அதனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்த‌தால் அனிதாவை  கொன்று சாக்குப்பையில் கட்டி குமரங்குடியில் புதைத்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார் கார்த்திக்... 

கார்த்திக் சொன்ன இடத்தை தோண்டி, அனிதாவின் அழுகிய உடலை மீட்ட போலீசார், அங்கேயே மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் கார்த்திக்கை கைது செய்த‌து மட்டுமின்றி, அவரது தந்தை பொன்னுசாமி, சகோத‌ர‌ர் சரவண‌ன், மனைவி சத்யா ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

160 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

95 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

61 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

21 views

பிற செய்திகள்

"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்"

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

0 views

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

4 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

7 views

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

12 views

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

15 views

பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.