டாஸ்மாக் ஊழியர் படுகொலை வழக்கு - கொலை செய்த‌து மாற்றுத்திறனாளியா? சிசிடிவி காட்சியில் சிக்கிய குற்றவாளிகள்

டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் உருவம் சிசிடிவியில் பதிவான நிலையில், அதில் ஒருவர் நொண்டியபடி செல்வதால், மாற்றுத்திறனாளியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர் படுகொலை வழக்கு - கொலை செய்த‌து மாற்றுத்திறனாளியா? சிசிடிவி காட்சியில் சிக்கிய குற்றவாளிகள்
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் டாஸ்மாக் கடையில் கடந்த 4ஆம் தேதி சேல்ஸ்மேன் துளசிதாசை அடித்து கொன்ற மர்ம நபர்கள் மற்றொரு சேல்ஸ்மேன் ராமை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். ராமுவுக்கு சிகிச்சை அளித்தபோது, அவரது நுரையீரலில் இருந்து துப்பாக்கி தோட்டா கைப்பற்றப்பட்டதால் இந்த வழக்கு மீதான பரபரப்பு மேலும் அதிகரித்த‌து. சமீபத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட முர்துஜா கும்பல் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், விசாரணையில் அது உண்மையில்லை என தெரிய வந்த‌து. இதையடுத்து மீண்டும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சிசிடிவியில் ஒருவர் நொண்டியபடி செல்வதால், மாற்றுத்திறனாளியாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்