அதிமுக பொன்விழா கொண்டாட்டம் - பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி
பதிவு : அக்டோபர் 17, 2021, 04:58 PM
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் லை ஹவுஸ் பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலைகளுக்கு முன்னால் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் பாதிரி குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பொன்விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


* தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முன்னாள் அமைச்சர் இராஜலட்சுமி தலைமையில், பட்டாசுகள் வெடித்து, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி பொன்விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.


* திருச்சி நீதிமன்ரம் அருகே உள்ள எம். ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறான முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.