மெட்ரோ ரயில் நிலைய பணி - போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகளை முன்னிட்டு அயனாவரம்-புரசைவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலைய பணி - போக்குவரத்து மாற்றம்
x
அதன்படி ஆண்டர்சன் சாலையில் RTO அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

அதேபோல் பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

அதேபோல் ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது

மேலும்,கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புரசைவாக்கத்தில் மில்லா்ஸ் சாலையிலிருந்து ரங்கநாதன் அவென்யூ வழியாக இடது புறம் திரும்பி செல்ல அனுமதியில்லை  என்றும் சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்