அதிமுக பொன்விழா ஆண்டு; எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை -ஆடல், பாடலுடன் அதிமுகவினர் உற்சாகம்
பதிவு : அக்டோபர் 17, 2021, 12:41 PM
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அதிமுக ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 50-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், முக்கிய நிர்வாகிகளுடன் வருகை தந்தனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பிய நிலையில், தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அதிமுக பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்ட இருவரும், தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு மறைந்த அதிமுக தொண்டர்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் நிதி உதவி வழங்கினர்.

அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்கம்/ஆடல், பாடலுடன் அதிமுகவினர் உற்சாகம்:

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம் களைகட்டியது. அவ்வை சண்முகம் சாலையில்,  ஆடல், பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சாலையின் ஓரத்தில் பிரமாண்ட ரப்பர் யானை ஒன்று, காண்போரைக் கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழும் விதமாக பாடல்கள் இசைக்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

501 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

"முழுவதுமாக அரசு பள்ளியில் படித்தேன்"; "2-வது முறையாக தேர்வு எழுதியதில் வெற்றி"

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0 views

காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடைபெறுகிறது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு

காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் வீடுகளில் சோதனை நடைப்பெறுவதாக எஸ்.பி வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

7 views

அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் சோதனை - சோதனையின் போது அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

கோவையில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

9 views

#Breaking || 20,453 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை

சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்

10 views

"விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை வாட்ஸ் அப் குழுவில் சேர்க்க வேண்டும்"

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், விடுதிக் காப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆதிதிராவிட நல ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

8 views

கடலில் 19 கி.மீ. தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி சாதனை

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி தாரகை ஆராதனா, Save The Ocean என்பதை வலியுறுத்தி 19 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.