பொன்விழா ஆண்டில் அதிமுக: எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சி கடந்து வந்த பாதை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...
பொன்விழா ஆண்டில் அதிமுக: எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சி கடந்து வந்த பாதை
x
முன்னாள் முதல்வர் அண்ணாவின் மறைவையடுத்து, திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
இதனையடுத்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர். தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உதயமானது. அப்போது ஒரு சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டேன் என பிரகடனமாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்...

பின்னர், அண்ணா கட்டளையிடுவது போல் கொடி உருவாக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் அதிமுகவின் அடையாளமாக மாறியது.

திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூக தொண்டனாகவும், ஏழைகளின் தோழனாகவும் அவருக்கு பெயரை பெற்றுக்கொடுக்க மக்கள் ஆதரவும் பெருகியது.

1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதல் வெற்றியை ருசித்த அதிமுக, 
அடுத்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளை குவித்து 3 முறை தொடர்ச்சியாக ஆட்சியை கைப்பற்றி கோட்டையில் கோலோச்சியது

"1977, 80, 84 சட்டப்பேரவை தேர்தல்களில் அமோக வெற்றி"
"1984 தேர்தலில் 195 இடங்களை அதிமுக கைப்பற்றியது"
"மருத்துவமனையில் இருந்தே எம்.ஜி.ஆர். வெற்றி"
"வரலாற்றில் யாரும் இதுபோன்று வெற்றி பெற்றதில்லை"

11 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆர், தனது படங்களில் கூறிய கருத்துக்களையும், சீர்திருத்தங்களையும் சட்டம் இயற்றி நிறைவேற்றினார்...

முதியோர் உதவித் தொகை திட்டம், சத்துணவு திட்டம், இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம், உதவி தொகை திட்டங்களோடு அவருடைய தனித்துவமான செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் 
கொண்டாடப்பட்டது

1987 ஆம் ஆண்டு 70 வயதில் எம்.ஜி.ஆர். மறைவை தொடந்து, அவரது மனைவி ஜானகி முதல்வரானார். பின்னர் ஜானகி கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கவும், அவர் எம்.ஜி.ஆர். வழியில் அதிமுகவை வழிநடத்தினார்.  எம்.ஜி.ஆர். விதை போட்ட இயக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த தலைவர்களால் பேரியக்கமாக தொடர்ந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்