"பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம்" - ராஜஸ்தான் மாநில அரசு அனுமதி

ராஜஸ்தானில் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது.
பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் - ராஜஸ்தான் மாநில அரசு அனுமதி
x
ராஜஸ்தானில் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு  பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்  ராஜஸ்தான் மாநில அரசு தனது முந்தைய உத்தரவில் திருத்தம் செய்துள்ளது. அதன் படி, பசுமை பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி - பட்டாசு தடை நீக்கியதால் மகிழ்ந்த தொழிலாளர்கள்

முதலமைச்சர் ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தான் எழுதிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் எழுதிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டாசு விற்பனைக்கு தடையை அசோக் கெலாட் நீக்கியதாக ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் அசோக் கெலாட் அவர்களுக்கு எனது நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ள அவர், வாழ்வாதாரத்துக்கு பட்டாசுத் தொழிலையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோரில் வாழ்க்கையில் கனிவுமிகு உங்கள் அன்பு ஒளியேற்றும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் பட்டாசுக்கு தடை நீக்கம்: இரு மாநில முதலமைச்சர்களுக்கும் நன்றி

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுக்கு விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 
உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பட்டாசு தொழில் நலிவடைந்துள்ள நிலையில், சுமார் 10லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே பட்டாசுக்கு விதித்த தடை  4 நீக்குமாறு 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதை ஏற்று,  தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததையேற்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பசுமை பட்டாசு உபயோகத்திற்கு தடையில்லை என அறிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்