வணிக வளாகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்

சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் 72 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையன் கைதானது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
வணிக வளாகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்
x
சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் 72 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையன் கைதானது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் ஆசிஷ் பன்சால் என்பவருடைய அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆம் தேதி அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த 72 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, இரவு நேரத்தில் இரண்டு பைகளுடன் ஒருவர் நடந்து செல்வதும், வெளியே சென்று ஆட்டோவில் தப்பியதும் தெரியவந்தது.

கொள்ளையனை விரைந்து பிடிக்க கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் இறங்கியது காவல்துறை

கொள்ளையன் சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், அவர் திருவல்லிக்கேணியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றது தெரியவர, அங்கு சென்று விசாரித்தனர் போலீசார்.

போலீஸ் செல்வதற்கு முன்பே அந்த நபர் விடுதியை காலி செய்ததால், அங்கு பதிவு செய்த போன் நம்பரை வைத்து TRACE செய்த போது அவர், தியாகராய நகரில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது.

பின்னர் சம்பந்தப்பட்ட ஒட்டலுக்கு சென்ற போலீசார், சூட் ரூமில் அறையெடுத்து தங்கியிருந்த நபரை மடக்கினர். 

விசாரணையில் அவர்  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பதும், 1981 முதல் இதுவரை அவர் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு கோவையில் கொள்ளையடித்த வழக்கில் சிறை சென்றதாகவும், வெளியே வந்த பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். 

இருப்பினும் வாங்கிய கடன் கழுத்தை நெறுக்கியதால், சென்னைக்கு வந்து ஒரு மாதமாக வணிக வளாகங்களை நோட்டமிட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, பாண்டுரங்கனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவரிடம் இருந்து 61 லட்சம் ரூபாயை மீட்டனர். 
====

பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.. 72 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த பாண்டுரங்கன், தன் தோற்றம் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு ஹேர் கலரிங் மற்றும் பேஷியல் செய்து தன்னை பளபளப்பாக மாற்றி உள்ளார்...

அதேநேரம் கொள்ளை தொழிலை மட்டுமே நம்பிய அவர், சொகுசு ஓட்டலில் தங்கியதோடு, உயர் ரக மது, காஸ்ட்லியான சாப்பாடு என இருந்து வந்ததும் தெரியவந்தது...

பிரபல வணிக வளாகங்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், பணம் அதிகம் புழங்கும்  கார்ப்பரேட் அலுவலகத்தை குறிவைத்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. பாதுகாப்பு குறைபாடு உள்ள  தனியார் வணிக நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கொள்ளையடிப்பதையு​ம் பாண்டுரங்கன் வழக்கமாக வைத்துள்ளார். 

கொள்ளையடிப்பதற்கு முன்பாக சாதாரண லாட்ஜ்களில் தங்கும் பாண்டுரங்கன், கொள்ளையடித்த பின் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படியாக பல நாள் திருடன் கடைசியில் சிக்கியிருக்கிறார்... 


Next Story

மேலும் செய்திகள்