என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை - தூத்துக்குடியில் போலீசார் அதிரடி
தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன் என்பவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அருகே உள்ள திருமலையாபுரத்தை சேர்ந்தவர் துரைமுருகன். 39 வயதான இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்ளிட்ட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே நெல்லையை சேர்ந்த இளைஞர் ஜெகதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் துரைமுருகனை தேடி வந்தனர். இதனிடையே தன் தாயின் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடியில் இருந்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது துரைமுருகன் போலீசாரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து எஸ்.ஐ. ராஜபிரபு என்பவர், துரைமுருகனை என்கவுன்ட்டர் செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இப்போது தூத்துக்குடியில் மேலும் ஒரு ரவுடி கொல்லப்பட்டுள்ளார்.
Next Story

