சம வாக்குகள் பெற்ற 2 பெண் வேட்பாளர்கள் - செல்லாத வாக்குகள் ஆய்வு

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் சமமான வாக்குகளை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
நீலகிரி மாவட்டம்கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் 6 வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட நதியாவும், சீப்பு சின்னத்திலும் போட்டியிட்ட திலகவதியும் தலா 110 வாக்குகள் பெற்றனர். 2 வேட்பாளர்கள் சம எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பதிவாகி இருந்த 5 செல்லாத வாக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நதியாவிற்கு விழுந்த 2 வாக்குகள் வாக்கு எண்ணிக்கையின் போது தவறுதலாக செல்லாத வாக்குகள் கணக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் கூடுதலாக 2 வாக்குகள் பெற்ற நதியா வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
---



Next Story

மேலும் செய்திகள்