"100 ஆண்டுகளுக்கு மேலுள்ள கோவில்; புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது" - அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

100 ஆண்டுகளுக்கு மேலுள்ள கோவில்களில் எந்தவிதமான புதிய கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
x
செயல் அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,100 ஆண்டுகளுக்கு மேலுள்ள கோவில்களில், கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் இருப்பின் அதனை ஆவணப்படுத்தவும், வல்லுநர்களை கொண்டு பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மண்டபங்களின் மேற்புறம் தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் தண்ணீர் கொள்கலன்களை அமைக்க கூடாது என்றும் கூறியுள்ளார். கல் கட்டுமானங்களில் எதற்காகவும் துளையிடுதல், மின் சாதனங்கள் பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும், ஆஸ்பெட்டாஸ் மற்றும் தகரத்திலான, மேற்கூரைகளை கோவிலின் உள்புறம் அமைக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். கோவில் கோபுரங்கள், விமானங்கள் மீது ஒலிபெருக்கி, ஒளிரும் கோவில் பெயர் பலகைகள் அமைக்க கூடாது எனவும், செங்கல் சுவர், கான்கிரீட் சுவர்களில் கண்களை உறுத்தாத வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்