தந்தி டிவி செய்தி எதிரொலி - விதவைப் பெண்ணுக்கு 24 மணி நேரத்தில் இலவச வீடு வழங்கி அரசு உதவி

தந்தி டிவி செய்தி எதிரொலியால், கரூரில் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில், 3 பெண் குழந்தைகளுடன் தவித்த விதவைப் பெண்ணுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இலவச வீடு மற்றும் வேலை வழங்கி உள்ளார்.
x
கரூரை அடுத்த தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வராணி. இவரது கணவர் மாணிக்கம், கடந்த மாதம் சாலைவிபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல், 3 பெண் குழந்தைகளுடன் செல்வராணி தனது உறவினர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் தனக்கு வீடு மற்றும் வேலை வழங்குமாறு செல்வராணி மனு அளித்தார். இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியானது. இந்நிலையில், செல்வராணியின் கோரிக்கையை அறிந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் உத்தரவின்பேரில் அதற்கான ஆணைகளை பெற்றுத் தந்துள்ளார். இந்நிலையில், இலவச வீடு மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளருக்கான ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று செல்வராணியிடம் வழங்கினார். பணி ஆணையைப் பெற்றுக் கொண்ட செல்வராணி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்