கோவில் நகைகளை உருக்கும் விவகாரம் : "5 லட்சம் கி. நகைகள் உருக்கப்பட்டுள்ளன" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் கிலோ கோவில் நகைகள் உருக்கப்பட்டு, வங்கிகளில் தங்க கட்டிகளாக டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது.
கோவில் நகைகளை உருக்கும் விவகாரம் : 5 லட்சம் கி. நகைகள் உருக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்
x
தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரத்து137 கிலோ தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் தங்க கட்டிகளாக டெபாசிட் செய்ய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கோவில்களுக்கு சொந்தமான புராதன நகைகள் உள்ளதாகவும். நகைகள் குறித்த எந்த பதிவேடும் இல்லாத நிலையில், அவற்றை தணிக்கை செய்யாமல் உருக்க அனுமதிக்க கூடாது என்றும் வாதாடினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கடந்த 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகள் உருக்கி, தங்க கட்டிகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். இதுவரை 5 லட்சம் கிலோ நகைகள் உருக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மூலம் 11 கோடி ரூபாய் ஆண்டுதோறும் வருவாய் கிடைப்பதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், கோவில் நகைகளை உருக்கும் முன் அவற்றை கணக்கெடுப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையையும் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதனையடுத்து, அரசாணை குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்