தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை இருப்பதாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 2.40 லட்சம் டன் நிலக்கரி அரசின் கைவசம் இருப்பு உள்ளதாக, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம், பேசிய அவர் தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என தெரிவித்தார். நிலக்கரி சுரங்கங்கள் ஒட்டிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு 6 நாள் இருப்பு வைத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி தற்போது 4 நாட்கள் கையிருப்பு வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 41 சதவீதம், அனல்மின் நிலையங்களில் இருந்து கிடைப்பதாகவும், தமிழக அரசின் சொந்த உற்பத்தியாக 1,800 மெகா.வாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார். தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2830 மெகா.வாட் பெறப்பட்டு வந்த நிலையில், நிலக்கரி விலை உயர்வு, மழைக்கால நிலக்கரி வரத்து குறைவு போன்ற காரணங்களால், 1,300 மெகாவாட் தான் அரசுக்கு தனியார் அனல் மின் உற்பத்தியாளர்கள் வழங்குவதாக கூறினார். நமது அனல்மின் நிலையங்களில் 80% நிலக்கரி உள்நாட்டு உற்பத்தியாகவும், 20% மட்டுமே வெளிநாட்டு நிலக்கரி அதனுடன் கலந்து எரியூட்டப்படுவதால், நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை இருப்பதாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 2.40 லட்சம் டன் நிலக்கரி அரசின் கைவசம் இருப்பு உள்ளதாக, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்