உள்ளாட்சி தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நாளை எண்ணப்பட உள்ளன.
உள்ளாட்சி தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை
x
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகளும் கடந்த 9 ஆம் தேதி நடந்த 2ஆம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தெரிவித்துள்ளது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 74 மையங்களில் நாளை நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை காலை 8 மணிக்கு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நிற அடிப்படையில் வாக்குச் சீட்டுகளை பிரிக்கும் பணி துவங்கும் என்றும் அதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியே 40 மேஜைகள் வரை போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணி துவங்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வட்டாரபார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி, தோல்வி விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் எனவும் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்