வரும் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா - ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஆலோசனை

அதிமுக பொன் விழா, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அதிமுக தலைமை ஆலோசனை நடத்தியது.
வரும் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா - ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஆலோசனை
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த
கூட்டத்தில், கட்சியின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, அதிமுக பொன் விழா கொண்டாட்டம், சசிகலா வருகை, மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும், சசிகலா வருகை அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்