டாஸ்மாக் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 11, 2021, 01:21 PM
பணத்தை கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த மற்றொருவர் உடலில் துப்பாக்கி குண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்தக் கடையின் விற்பனையாளர்களான ராம், துளசிதாஸ் இருவரும் விற்பனை முடித்து வீட்டுக்கு கிளம்பியுள்ளனர். மதுபாரில் இருந்த பைக்கை எடுக்கச் சென்றபோது, திடீரென வந்த மர்ம கும்பல், விற்பனை பணத்தைக் கேட்டு இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய ராம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, மார்பு பகுதியில் வலி இருந்ததால், ஸ்கேன் செய்து பார்த்ததில், துப்பாக்கி குண்டு இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் அதை  அகற்றிய நிலையில், உயிரிழந்த துளசிதாஸின் உடலிலும், துப்பாக்கி குண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டது வடமாநில தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

579 views

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

68 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

17 views

பிற செய்திகள்

"உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மை" - விஜயகாந்த் அறிக்கை

நூறு ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

11 views

"ரஜினி முன் விருது வாங்கியதை பாக்கியமாக கருதுகிறேன்" - டி.இமான்

இசையோடு இசைந்திருப்பதே தமது இலக்கு என்றும் விருதை நோக்கி தனது இலக்கு இல்லை என்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

9 views

20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தமிழகத்தின் 3-வது பெரிய ஏரி - விவசாயிகள் கோரிக்கை

20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தமிழகத்தின் 3-வது பெரிய ஏரிக்கு காவிரி நீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

5 views

கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை - எச்சரிக்கை விடுத்த WHO தலைவர்

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 views

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா - புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

44 views

பிரதமரை வீட்டுக்காவலில் வைத்த ராணுவம் - ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் ராணுவம்

சூடான் பிரதமரை அந்நாட்டு ராணுவம் வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.