பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் - 5 பேர் கைது
பதிவு : அக்டோபர் 10, 2021, 12:56 PM
காரைக்குடியில், பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரபல கல்லூரியைச் சேர்ந்த தேவகோட்டை மாணவர் அசோக் கோபிநாத், உணவகம் ஒன்றில் தனது நண்பர்களுக்கு விருந்தளித்துள்ளார். அனைவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், அங்கு கணவனுடன் வந்த இளம்பெண்ணிடம், போதையில் இருந்த மாணவன் ஒருவன் ஆபாச செய்கை மூலம், தலைமுடியை இழுத்து தவறாக நடந்துள்ளான். இதை தட்டிக்கேட்ட நிலையில், 12 பேரும் இளம்பெண்ணின் கணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். உணவகத்தையும் சூறையாடியுள்ளனர். இதனிடையே, உணவகத்துக்கு சாப்பிடச் சென்ற தங்களின் செல்போன் கடையில் தவறி விழுந்து விட்டதாக கூறி, காவல் நிலையத்தில் மாணவர்கள் புகாரளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, போலீசார் அழைப்பின் பேரில், காவல் நிலையம் சென்ற உணவக உரிமையாளர், சிசிடிவி காட்சிகளுடன் நடந்ததை விளக்கியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் 12 பேரில், 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 7 பேரை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

111 views

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

100 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

45 views

போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடி - அனன்யா பாண்டேவின் செல்போன் பறிமுதல்

போதைப் பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.

25 views

"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது"; "அப்பாக்கள், மகள்களுக்கு சமர்ப்பணம்" - இசையமைப்பாளர் இமான் பேட்டி

"கண்ணான கண்ணே" பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

15 views

பிற செய்திகள்

போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 views

பருவநிலை மாற்றம் பற்றி ஐ.நா மாநாடு - இலக்கை அறிவிக்க இந்தியா மறுப்பு

கார்பன் வெளியேற்றத்தை நிறுத்துவது தொடர்பாக ஒரு இலக்கை அறிவிக்க இந்தியா மறுத்துள்ளது.

3 views

ஹோன்டுராசில் இருந்து வெளியேறிய மக்கள் - மெக்சிகோவில் தஞ்சம்

ஹோன்டுராஸ் நாட்டில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோர், புதிய வாழ்க்கை தொடங்குவதில் முனைப்பாக உள்ளனர்.

8 views

"இந்தியா-ஆசியான் நாடுகளிடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்" - பிரதமர் மோடி உறுதி

பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இந்தியா ஆசியான் நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

11 views

லா பல்மா எரிமலை வெடிப்பு - விண்ணை முட்ட மேலெழும்பும் புகை

ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து லாவா குழம்பும் புகையும் வெளியேறி வரும் நிலையில், அது தொடர்பான் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன

8 views

12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி - இன்னும் சில வாரங்களில் அனுமதி

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களுக்குள்ளாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.