மினி லாரி மீது மோதிய இருசக்கர வாகனம் - ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அம்பலகடை பகுதியில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது இருசக்கர வாகனம் மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மினி லாரி மீது மோதிய இருசக்கர வாகனம் - ஒருவர் உயிரிழப்பு
x
அம்பலகடை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். கூலி தொழிலாளியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். அப்போது, சாலையோர நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில், இருசக்கர வாகனத்துடன் மோத, ஐயப்பன் தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்