முதல்வருக்கான கான்வாய் வாகனங்கள் குறைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை, 6 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
முதல்வருக்கான கான்வாய் வாகனங்கள் குறைப்பு
x
வழக்கமாக முதலமைச்சரின் பாதுகாப்புக்காக, 12 வாகனங்கள் கொண்ட கான்வாய் செல்லும். முதலில் போக்குவரத்து போலீசார் வாகனம், அதனை தொடர்ந்து மூன்று வாகனங்கள், அதன் பின்னர் முதல்வர் வாகனம், பின்னே 7 பாதுகாப்பு வாகனம் என, 12 வாகனங்கள் இருக்கும். இந்நிலையில் சென்னையில், முதலமைச்சர் பயணத்தின் போது, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், முதல்வரின் வாகனத்துக்காக பிற வாகனங்களை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கான்வாயில் செல்லும் வாகனங்கள் 6 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல், அவர்களோடு, முதல்வரின் வாகனமும் பயணிக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்