குறை பிரசவம் - காரணம் என்ன? - விளக்கம் தரும் மகப்பேறு மருத்துவர்

குறை பிரசவத்திற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் லாவண்யா தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
x
குறை பிரசவத்திற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் லாவண்யா தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். பொதுவாக 40 வார காலத்திற்கு பின் குழந்தைகள் பிறக்கின்றன. 37 வாரங்களுக்கு முன் குழந்தை பிறக்குமாயின் அது குறைப்பிரசவம் என கருதப்படும். அந்த வகையில் குறைப் பிரசவங்கள் காரணமாக, இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சிசு மரணம், குறுகிய மற்றும் நீண்ட கால நோய், பிற்கால வாழ்க்கையில் ஏற்படும் ஊனம் போன்ற காரணங்களால் உலகம் முழுவதிலும் குறைப் பிரசவம் பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது. சர்க்கரை நோய் , ஏற்கனவே கருக்கலைப்பு, தொற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தை பிறப்பு முந்துவதாக மகப்பேறு மருத்துவரான லாவண்யா கூறுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்