மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்  குழு அமைப்பு
x
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது
 
மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் துணை தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவீந்திரநாத்குமார், நவாஸ்கனி ஆகியோரும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதேபோல் மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மௌலானா, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் உறுப்பினர்களாக  உள்ளனர்.

அதேபோல் இக்குழுவில் பல்வேறு அரசுத் துறை செயலாளர்கள்,  துறைத் தலைவர்கள்,  அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,  மாநில   அளவிலான வங்கியாளர் குழுவின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்