ராஜேந்திரபாலாஜி வழக்கு - காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

அதிமுக நிர்வாகி மீதான தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜேந்திரபாலாஜி வழக்கு - காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு
x
அதிமுக நிர்வாகி மீதான தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த செப்டமர் மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றார். 

அப்போது, உட்கட்சி பூசலால் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

மோதலில் மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் முன்ஜாமின்கோரி ராஜேந்திரபாலாஜி உட்பட 5 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 22 தேதிக்கு ஒத்தி வைத்தது. 

அதுரையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்