காகித தாளில் எக்ஸ்ரே முடிவுகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே முடிவுகள் காகித தாளில் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
x
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், ஃபிலிம் இல்லாததால் எக்ஸ்ரே முடிவுகள் காகித தாளில் வழங்கப்படுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

நிதிப் பற்றாக்குறையால் ஃபிலிம்முக்கு பதிலாக காகிதத்தில் எக்ஸ்ரே முடிவுகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் 
ஓ. பன்னீர்செல்வம், சுகாதார துறைக்கு திமுக அரசு போதிய நிதி ஒதுக்காததால், காகித தாளில் எக்ஸ்ரே முடிவுகளை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

எக்ஸ்ரே முடிவுகள் தற்போது டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப், கணினி மூலமே அனுப்பப்படுகிறது என்றும், ஒரு பதிவுக்காக மட்டுமே அவ்வாறு காகிதத்தில் குறித்து தரப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்