முறைகேடு புகாருக்கு உள்ளாகும் கூட்டுறவு சங்கத் தலைவர்களை இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம்

முறைகேடு புகாருக்கு உள்ளாகும் கூட்டுறவு சங்கத் தலைவர்களை இடைநீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு புகாருக்கு உள்ளாகும் கூட்டுறவு சங்கத் தலைவர்களை இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம்
x
முறைகேடு புகாருக்கு உள்ளாகும் கூட்டுறவு சங்கத் தலைவர்களை இடைநீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முறைகேடு புகாருக்கு உள்ளாகும் கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத் தலைவர்களை, இடைநீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. சங்கங்களின் நலனுக்காகவே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தலைவர் மற்றும் துணைத் தலைவரை இடைநீக்கம் செய்ய சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கியதில் தவறில்லை என்று உத்தரவு பிறப்பித்தனர்.

கையாடல், நம்பிக்கை மோசடி, தவறான நிர்வாகம் தொடர்பான புகார்கள் வரும்பொழுது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நடத்திய விசாரணையில் ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால் மட்டுமே இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தினர். 

இதனால் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய மறுத்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்