"பட்டாசு கட்டுபாடு உத்தரவுகளை பின்பற்றுக" - உச்சநீதிமன்றம்

பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பட்டாசு கட்டுபாடு உத்தரவுகளை பின்பற்றுக - உச்சநீதிமன்றம்
x
பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகாசியில் 5 லட்சம் குடும்பங்கள் பட்டாசு தொழிலை நம்பி இருப்பதாகவும்  உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம் செய்தார். குறுக்கிட்ட நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பேரியம் உப்பை ஏன் பட்டாசு தொழிற்சாலைகளின் கிடங்கில் வைத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர். பின்னர், பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,தீபாவளி கொண்டாட்டங்களுக்கு  எதிராக  உச்சநீதிமன்றம் இல்லை என தெரிவித்தனர். தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்