பிரியங்கா காந்தி கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் நிர்வாகி பகிரங்க எச்சரிக்கை
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஞ்சன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரியங்கா காந்தி விடுவிக்கப்படவில்லை என்றால், தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் முற்றுகையிடப்படும் என்றும், ஒவ்வொரு பாஜகவினரும் தாக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
Next Story

