முதலமைச்சர் வீடு அருகே தீக்குளித்தவர் பலி - தீக்குளித்த நபர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 05, 2021, 02:11 AM
ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக கூறி முதலமைச்சர் வீடு அருகே தீக்குளித்த நபர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
கடந்த 27ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வீடு அமைந்துள்ள சென்னை சித்தரஞ்சன் சாலை பகுதிக்கு சென்ற 40 வயது நபர் ஒருவர் பிளாஸ்டிக் கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்ததுடன் அவரை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் கோவில்பட்டி தாலுகா ஜமீன் தேவர்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்ததாக சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை வெற்றிமாறனின் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

591 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

120 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

57 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

48 views

பிற செய்திகள்

"அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை" - நரிக்குறவர் இன மக்கள் வேதனை

கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

7 views

விரைவில் "5 மாவட்டங்களில் நெல் அரைக்கும் குடோன்கள் - அமைச்சர் சக்கரபாணி உறுதி

பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் ஐந்து மாவட்டங்களில் தினமும் 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் குடோன்கள் அமைக்கப்படும் என, உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

9 views

நாடாளுமன்றத்தில் "எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுகிறது" - திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் நெறிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக, திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

9 views

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரியும், மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சிறை தண்டனைக்கு வகை செய்யும் சட்டப்பிரிவு" - திமுக எம்பி கவுதம சிகாமணி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதாவில் நீண்ட ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என, திமுக எம்பி கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

10 views

"தமிழகம் மருத்துவ சுற்றுலா மையமாக திகழ்கிறது" - அதிமுக எம்.பி ரவீந்திரநாத்

மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் திகழ்வதாக, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.