"நடமாடும் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நடமாடும் நெல் கொள்முதல் நிலைங்கள் மூலம், நெல் கொள்முதல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
நடமாடும் நெல் கொள்முதல் நிலைங்கள் மூலம், நெல் கொள்முதல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு காரிப் பருவத்தில் 44.90 லட்சம் மெட்ரிக் டன் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது  கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில், 12.50 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த பருவத்தில் 752 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுவதாகவும், கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், 608 நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் பயன் அடைந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பருவத்தில், கூடுவதலாக 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். 
 
நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த, ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்