ஊழல் எனும் கரையான்- நீதிபதிகள் வேதனை
பதிவு : அக்டோபர் 02, 2021, 04:36 PM
ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஊழல் எனும் கரையான்- நீதிபதிகள் வேதனை

ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் மீண்டும் அவருக்கு பணி வழங்க உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.அத்துடன், ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும் லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டதாக கூறிய நீதிபதிகள் ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

0 views

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

8 views

அமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் வாழ்த்து

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

104 views

திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவள்ளூரில் மழை பாதித்த பகுதிகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

4 views

தொடர் மழையால் கடும் பாதிப்பு - படகுகள் மூலம் மக்கள் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

3 views

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.