ஃ பிரீ பையர் கேம் விளையாடிய 15 வயது மகன் - பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே செல்போனில், ஃ பிரீ பையர் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
ஃ பிரீ பையர் கேம் விளையாடிய 15 வயது மகன் - பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை
x
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே செல்போனில், ஃ பிரீ பையர் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். வள்ளிமயில் என்பவரது மூத்த மகன் சஞ்சய், மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். சஞ்சய் செல்போனில் பிரீ பையர் ஆன்லைன் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் சஞ்சய் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து தகவலறிந்த திசையன்விளை போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்