தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; 4 மாதங்கள் கால அவகாசம் - உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, 4 மாதங்கள் கால அவகாசம் அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, 4 மாதங்கள் கால அவகாசம் அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, கால அவகாசம் கோரி, மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.இந்த மனு மீது, இன்று நடந்த விசாரணையில், அவகாசம் கேட்பதற்கான காரணங்களை, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது, மாநில தேர்தல் ஆணையம். அதில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு, கூடுதல் மாநகராட்சிகள், நகராட்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், இவற்றுக்கான வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு பணிகளை நிறைவு செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் தமிழகம் இருப்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்தல் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டி வரும் என வாதிடப்பட்டது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க, 7 மாதங்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



Next Story

மேலும் செய்திகள்