"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தேர்தல் பிரசாரத்திற்காக வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த, போலீசாரிடம் எழுத்து பூர்வமான அனுமதி பெற வேண்டும் என்றும்,

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கட்டடங்களில் சுவர் எழுத்துக்கள் எழுத கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்றும்,

கட்- அவுட்கள், விளம்பர பலகைகள், கொடிகள் வைக்க அனுமதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடத்தின் உரிமையாளரிடம் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில், சுவரில் எழுத, சுவரொட்டி ஒட்டக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்