நாகை தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

நாகை அருகே உள்ள குலோத்துங்க சோழர் கால கோயிலில் பூமிக்குள் புதைந்திருந்த 17 ஐம்பொன் சாமி சிலைகள் உள்பட 47 ஐம்பொன் பூஜை பொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
x
நாகை அருகே உள்ள குலோத்துங்க சோழர் கால கோயிலில் பூமிக்குள் புதைந்திருந்த 17 ஐம்பொன் சாமி சிலைகள் உள்பட 47 ஐம்பொன் பூஜை பொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் தேவூரில் உள்ள  குலோத்துங்க சோழர் கால தேவபுரீஸ்வரர் கோயிலில்   திருப்பணிக்காக சீரமைப்பு  பணிகள் நடைபெற்று  வருகின்றன. கோயிலில் உள்ள நவக்கிரக பீடத்தின் அருகே கான்கிரீட் அமைக்கும் பணியின் பொழுது பல ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை அதே இடத்தில் வைத்துவிட்டு காங்கிரீட் பணியை தொழிலாளர்கள் தொடர்ந்தனர். இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயிலுக்கு விரைந்து சிலைகள் இருந்த இடத்தில்
தோண்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட ஐம்பொன் சுவாமி  சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைத்தன. 13 அம்பாள் சிலைகள் 1 திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ
நாயனார் சிலை உள்பட 17 ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும்  ஐம்பொன் சங்கு, சூலம் உள்ளிட்ட 47 ஐம்பொன் பூஜை பொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு  சுவாமி சிலைகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



Next Story

மேலும் செய்திகள்