சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
x
வடக்கிழக்கு பருவ மழை அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி, 895 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 ஆயிரத்து 254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல் மற்றும் 948 மழைநீர் வடிகால்களில் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பணிகளை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று, சென்னையில் மழை நீர் தேங்கக் கூடிய இடங்களில் முதலமைச்சர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். கோட்டூர்புரம், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட மழையால் பாதிக்கப்படக் கூடிய 8 இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்..


Next Story

மேலும் செய்திகள்