எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
x

பாடும் நிலா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உடல்லக் குறைவால் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், எஸ்பிபி நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் எஸ்.பி.பி நினைவிடத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த சாந்தி ராஜ், எஸ்.பி.பி பாடிய 425 பாடல்களை துண்டுச் சீட்டில் எழுதி சட்டையில் ஒட்டியபடி அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அவரது நினைவிடம், எஸ்.பி.பிக்கு பிடித்த கடவுளான சிவலிங்க வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்