மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
x
மேகதாது அணை கட்டுமானம் குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, மேகேதாட்டு விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை  தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்கும் போது உரிய விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என வாதிட்டார். கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், மாநிலங்கள் ஒன்றுக்கொன்று என்ஜிடியில் சண்டையிட தொடங்கினால் பிரச்சினைகள் உருவாகும்  என வாதிட்டார். இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்கபோவதில்லை என கூறினர். தானாக முன் வந்து பதிவும் செய்யும் அதிகாரம் என்ஜிடிக்கு  உள்ளதா என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வெளி வந்த பிறகு தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்