போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு - அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

நேரடி போட்டி தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு - அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
x
நேரடி போட்டி தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக அரசு பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தி அறிவிப்பு செய்யப்பட்டது. அரசு அறிவித்த இந்த வயது வரம்பு சலுகை, முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு அமல்படுத்தாதன் காரணமாக தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதக்கூடிய அனைவருக்கும் வழங்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்